News September 14, 2024
கரூரில் சட்டப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்படியும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படியும், கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவால் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. இதில் கரூரில் நான்கு அமர்வுகளும், குளித்தலையில் இரண்டு அமர்வுகளும், அரவக்குறிச்சியில் ஒரு அமர்வு மற்றும் கிருஷ்ணராயபுரத்தில் ஒரு அமர்வு என மொத்தம் 8 அமர்வுகளில் நடைபெற்றது.
Similar News
News November 9, 2025
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு துவங்கி வைக்கும் ஆட்சியர்!

கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நாளை(10.11.25) காலை 10.00 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கல்லூரி மாணாக்கர்கள் பங்கேற்கும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைக்க உள்ளார்கள். மேலும் இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்களும் அரசு அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளார்கள்.
News November 9, 2025
கரூர்: இலவச பயிற்சியுடன் விமான நிலையத்தில் வேலை!

கரூர் மக்களே, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், விமான நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்ய இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு கல்வி போதுமானது. பயிற்சி முடிவில் சான்றிதழும், ரூ.20,000 முதல் ரூ.70,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும். மொத்த 6 மாத காலம் பயிற்சி. ஆர்வமுள்ளவர்கள் இங்கு <
News November 9, 2025
கரூர்: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

கரூர் மக்களே, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின்போது நீங்கள் வீட்டில் இல்லாவிட்டால், ஓட்டுரிமை விட்டு போய்விடுமோ? என்ற பயம் வேண்டாம். <


