News May 8, 2025
கரூரில் குரூப் – 4 இலவச பயிற்சி வகுப்பு!

கரூர்: வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் வரும் 13ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள இளைஞர்கள், உடனடியாக கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாக அல்லது 04324 -223555, 63830 50010 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 2, 2026
அரவக்குறிச்சி கீழே விழுந்த பெண் உயிரிழப்பு

அரவக்குறிச்சி, சுக்காம்பட்டியை சேர்ந்தவர் ராமுதாயி (52). இவர் தனது மகன் குணசேகரனுடன் டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தில் பின்னால் அமர்ந்து கொண்டு குள்ளம்பட்டி சாலையில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ராமுதாயி படுகாயம் அடைந்தார். கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராமுதாயி மகள் மேனகா புகாரில், அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
News January 2, 2026
கரூர்: மரத்திலிருந்து விழுந்தவர் பரிதாப பலி

கரூர், தான்தோன்றிமலை செட்டிபாளையம் அருகே ரவிக்குமார் என்பவர் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருக்கும் பொழுது, திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மூச்சுப் பேச்சு இன்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவர் பரிசோதனை செய்த பிறகு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
News January 2, 2026
கரூர்: B.E, B.TECH, MBA போதும்.. ரூ.3 லட்சம் சம்பளம்

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு B.E, B.TECH, MBA, ME முடித்த 21 முதல் 45 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.3 லட்சம் முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு <


