News July 7, 2025
கரூரில் கிராம உதவியாளர் வேலை

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் கரூர் மாவட்டத்தில் மட்டும் 27 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதில் பணியாற்றுபவருக்கு 10 ஆண்டுகளுக்கு பின் கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4க்குள் விண்ணப்பிக்க வேண்டும். <<16974694>>தொடர்ச்சி<<>>
Similar News
News August 25, 2025
கரூர்: வீராங்கனைகள் தேசிய அளவில் தேர்வு!

சென்னை OMRல் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற மண்டல அளவிலான பன்னாட்டு பள்ளிகளுக்கிடையிலான போட்டியில், காந்திகிராமம் தனியார் பள்ளி மாணவி மதுநிஷா (U-14), V.ஜோசினி (U-11) ரோடு Rese, Ring Rese – 500 மீ ஆகியப் பேட்டிகளில் சாதனை படைத்தானர். இருவரும் தேசிய அளவிலான போட்டிக்கு நேற்று(ஆக.24) தேர்வாகியுள்ளானர்.
News August 25, 2025
கருர்: பாலியல் தொழில் செய்த பாஜக பிரமுகர்!

கரூர் மாவட்டத்தில் ஜவுளித் தொழில் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களைக் குறிவைத்து, ஆசை வார்த்தை காட்டி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதுபடி, தாந்தோணிமலை, ஊரணிமேட்டு பகுதியில் உள்ள ஓர் வீட்டில் சோதனை நடத்தி அங்கு பாலியல் தொழில் செய்ததாக பாஜக உள்ளாட்சி பிரிவு மாவட்ட தலைவர் ரகுபதியை கைது செய்தனர்.
News August 25, 2025
கரூர்: தட்டித் தூக்கிய செ.பாலாஜி!

கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தளபதி அரங்கத்தில் திமுக கரூர் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நேற்று(ஆக.24) ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்.