News May 15, 2024

கரூரில் காப்போம் திட்டம் – 5 ஆயிரம் பேருக்கு சிகிச்சை

image

தமிழகத்தில் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டம் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைப்பதோடு குடும்பங்களுக்கு ஏற்படும் மருத்துவ செலவினங்கள் குறைக்கிறது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் வாயிலாக 5,090 பேருக்கு ரூ.3 கோடியே 55 லட்சம் செலவில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News July 11, 2025

கரூர்: 12th முடித்தால் கிராம வங்கியில் வேலை

image

தமிழகத்தில் NABARD வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில்( NABFINS) CSO( Customer Servive Officer) பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு முன் அனுபவம் தேவையில்லை, 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. 18 – 33 வயதுக்குட்பட்டவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், உங்களிடம் டூவீலர் இருப்பது அவசியமாகும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் செய்யவும்.<<>>(SHARE IT)

News July 11, 2025

கரூரில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

கரூரில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற ஜூலை 26ஆம் தேதி அரசு கலை கல்லூரி, தாந்தோன்றிமலையில் நடைபெறுகிறது. இம்முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு அனைத்து கல்வித்தகுதிகளிலும் பணியாட்களை தேர்வுசெய்யவுள்ளனர். வேலைதேடும் இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News July 11, 2025

கரூர்: தனியார் டிவி நிருபர் மீது தாக்குதல்

image

கரூர்: குளித்தலை, பிள்ளை தோப்பு தெருவைச் சேர்ந்தவர் சிவா(34). இவர், சன் ‘டிவி’யில் நிருபராக பணிபுரிந்து வருகிறார். போதையில் இருந்து நான்கு பேரும், அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிவாவிடம் இருந்த மொபைல் போன், பணத்தை பறிக்க முயற்சி செய்துள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த சிவா, குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

error: Content is protected !!