News March 30, 2025
கரூரில் கத்தியை காட்டி பணம் பறித்த நபர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் கீழ்மருதங்குளம் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் நேற்று முன்தினம் இரவு கரூர் காமராஜ் மார்க்கெட் அருகே டாஸ்மாக் மதுபான கடை பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது கரூர் மாவடியான் கோவில் தெருவை சேர்ந்த சஞ்சய்குமார் 24 என்பவர், கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாயை பறித்துள்ளார். இதுகுறித்த புகாரின்படி, சஞ்சய்குமாரை கரூர் டவுன் போலீசார் நேற்று கைது செய்தனர்.
Similar News
News April 2, 2025
கரூரில் Chat GPT பயிற்சி முகாம்

கரூர்: தான்தோன்றிமலையில் உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு Chat GPT பயிற்சி வகுப்பு வரும் ஏப்.12ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்தப் பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.editn.in என்ற இணையதளத்திலும், 99943 22859 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News April 2, 2025
கரூர்: வெயிலில் வேலை செய்வோர் கவனத்திற்கு!

கரூரில் மாவட்டத்தில் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாகவே உள்ளது. எனவே, தமிழக பொது சுகாதாரத்துறை சில வழிகாட்டுதல்கள் வெளியிட்டுள்ளது. அதில், வெளியில் வேலை செய்பவர்கள், பகல் 12 முதல் 3 மணி வரை வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே வேலை செய்ய வேண்டுமெனில் நிழலான இடத்தில் அடிக்கடி ஓய்வெடுத்து கொள்வதும், 20 நிமிடங்களுக்கு ஒருமுறை தண்ணீர் குடிப்பதும் அவசியம் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. SHARE IT!
News April 2, 2025
அங்கன்வாடி பணிக்கு ரெடியா?

தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இலவசமாக, அங்கன்வாடி ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதிற்கு அதிகமான பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் மூலம் தகுதிபெறுபவர்களுக்கு தொடக்கமே மாதம் ரூ.7,500 முதல் ரூ.20,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களை <