News August 11, 2024

கரூரில் ஒரு பயனாளிக்கு 40 கோழிக்குஞ்சுகள்

image

கரூர் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற 38,700 பெண்களுக்கு நாட்டின கோழிக்குஞ்சுகள் ஒரு பயனாளிக்கு 40 குஞ்சுகள் அரசு கால்நடை மருந்தகத்திற்கு சென்று கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பம் அளித்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த விண்ணப்பம் அளிக்க வேண்டிய கடைசிநாள் ஆகஸ்ட் 23 என மாவட்ட கலெக்டர் தங்கவேல் இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News November 9, 2025

கரூர் அருகே விபத்து: ஒருவர் படுகாயம்

image

கரூர், பழைய ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் முருகேசன்(70). இவர் நேற்று சாலையில் நின்று கொண்டு இருந்தார். அப்போது, அதே சாலையில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஓட்டி வந்த கார் மோதியது. இதில் முருகேசன் படுகாயம் அடைந்து, கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News November 9, 2025

கரூர்: ரூ.7,500 பரிசு… மக்களே உஷார்!

image

கரூர் மக்களே, வங்கிகளின் அசல் லோகோவை பயன்படுத்தி ரூ.7,500 வெகுமதி தருவதாக கூறி, பலரது ‘வாட்ஸ் ஆப்’ எண்ணுக்கு ஒரு ‘லிங்க்’ வருவதாக புகார் எழுந்துள்ளது. அது மோசடி செய்யும் நோக்குடன் சைபர் குற்றவாளிகளால் அனுப்பப்படும் ‘லிங்க்’ ஆகும். விவரம் தெரியாத பலரும் இதனால் ஏமாற்றப்படலாம். அந்த லிங்கை கிளிக் செய்தல் பணம் பறிபோகலாம். எனவே, உஷாரா இருங்க. இதுபோன்ற லிங்கை நம்பி ஏமாற வேண்டாம். SHARE பண்ணுங்க!

News November 8, 2025

கரூரில் தட்டிதுக்கிய முன்னாள் அமைச்சர்!

image

கரூர் மாவட்டம், இன்று (08.11.2025) கரூர் கிழக்கு ஒன்றியம்,
நெரூர் தென்பாகம், என்.புதுப்பாளையம் கிராமம் திமுக-வை சேர்ந்த சி.நாகமணி, எம்.கந்தசாமி,த.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் திமுகவில் இருந்து விலகி, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் அஇஅதிமுக தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வின் போது ஏரளமான அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!