News April 12, 2025
கரூரில் ஒப்பந்த அடிப்படையில் அரசு வேலை !

கரூர் மாவட்டத்தில், ஊரகப் பகுதிகளில் திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மைப் பணிகள் மற்றும் IEC பணிகளுக்கும் புற சேவை நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முழு விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்தினைப் பெற, மாவட்ட மகமை கிராம சேவை மையக் கட்டிடம், காவல் நிலையம் அருகில், காசா காலனி, மாயனூர் என்ற முகவரியை அணுகவும். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க !
Similar News
News April 13, 2025
தடைகள் நீங்க தமிழ் புத்தாண்டில் முருகனை வணங்குங்கள்!

கரூரில் பாலமலை முருகன் கோயில் போன்ற பல புகழ்பெற்ற முருகன் கோயில்கள் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் முருகனை, மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். மேலும் வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இதை SHARE பண்ணுங்க.
News April 13, 2025
Ghibli-க்கு நோ சொல்லுங்க கரூர் எஸ்பி எச்சரிக்கை!

Ghibli-Style-புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதில் நீங்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்களை டீப் ஃபேக் (Deep fake) தொழில்நுட்பத்தில் பயன்படுத்தி தவறாக சித்தரிக்கப்படும் அபாயம் உள்ளதாக கரூர் எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா எச்சரித்துள்ளார். சைபர் க்ரைம் தொடர்பான குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணை அழைக்கவும். இதை ஷேர் பண்ணுங்க!
News April 13, 2025
சட்டத்தை மீறியவர்களுக்கு பாடம்: 4 பேர் மீது பாய்ந்தது வழக்கு!

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆர்ச்சம்பட்டி கருப்ப நாயக்கன் குளம் அருகே அரசு அனுமதி இன்றி மண் அள்ளப்பட்டதாக ஆர்டிமலை கிராம நிர்வாக அலுவலர் ராமநாதன் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த ராஜா, வெங்கடாசலம், சுப்பிரமணி, சுரேந்திரன் ஆகிய 4 பேர் மீது தோகைமலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து உங்கள் கருத்து என்ன?