News August 3, 2024
கரூரில் ஆடிப்பெருக்கு: பலத்த போலீஸ் பாதுகாப்பு

கரூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு வேலாயுதம்பாளையம், புகளூர், தவிட்டுப் பாளையம், வாங்கல், நெரூர், மாயனுார், லாலாப்பேட்டை, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் காவிரி ஆற்றில் புனிதநீராடுவர். இதுமட்டுமல்லாது மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நீர்நிலைகளில் மக்கள் புனித நீராடி வழிபடுவர். பாதுகாப்பு கருதி அப்பகுதிகளில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Similar News
News August 5, 2025
கரூர்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

கரூரில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
News August 5, 2025
கரூர்: ரூ.1.5 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை

கரூர் மக்களே, தமிழக அரசின் நான் முதல்வன் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 126 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் (ம) விண்ணப்பனிக்க<
News August 5, 2025
கரூர்: இளைஞர்களுக்கான அழகுக்கலை பயிற்சி

கரூர் மாவட்டத்தில் தாட்கோ (ம) ஒரு தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு 45 நாட்கள் அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரப் பயிற்சி வழங்குகின்றன. 8-12ம் வகுப்பு வரை கல்வியுடன், 18-35 வயதுக்குள் உள்ளவர்கள் <