News January 17, 2025

கரூரில்எம்ஜிஆர் வேடம் அணிந்து எம்ஜிஆரின் ரசிகர்

image

கரூர் மாநகரப் பகுதியில் எம்ஜிஆர் பிறந்த தினத்தை முன்னிட்டு வெங்கமேடு பகுதியில் எஸ்பி காலனியில் உள்ள எம்.ஜி.ஆர் .அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வில் நடைபெற்றது. கரூரைச் சார்ந்த எம்.ஜி.ஆர்.இன் தீவிர ரசிகரான எம்ஜிஆர் முத்து என்பவர் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தை முன்னிட்டு எம்ஜிஆர் வேடம் அணிந்து கட்சியினர் நிர்வாகிகள் முன்பு காட்சியளித்தார். அவரை நிர்வாகிகள் பாராட்டினர்.

Similar News

News August 23, 2025

கரூரில் கலை கட்டப் போகும் திருவிழா!

image

கரூரில் நாளை(ஆக.24) இயற்கை வேளாண்மை திருவிழா காலை 9:00 – மாலை 6:00 வரை கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில், கண்காட்சி, சிறப்புப் பயிற்சி பட்டறை, இயற்கை உணவு செய்முறை பயிற்சி, 100க்கும் மேற்பட்ட விற்பனை அரங்குகள் முதலியவை இடம்பெறவுள்ளன. மேலும், பொதுமக்களுக்கு இலவச இயற்கை உணவு வழங்கப்படும். இதற்கு நுழைவு கட்டணம் இல்லை, என இயற்கை விவசாயிகள் சங்கத் தலைவர் கணேசன் தெரிவித்துள்ளார். (SHARE)

News August 23, 2025

கரூரில் சூரியகாந்தி விளைச்சல் அமோகம்

image

கரூர்: மைலம்பட்டி மேற்கு பகுதியில் மைலம்பட்டி, தரகம்பட்டி, சீதப்பட்டி, அய்யம்பாளையம், ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் சூரியகாந்தியை சுமார் 100 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் அதிக அளவு நடவு செய்கின்றனர். மேலும் தற்போது பெய்துள்ள மழையால் நல்ல விளைச்சலை சூரியகாந்தி கொடுத்துள்ளது என மகிழ்ச்சி வெள்ளத்தில் விவசாயிகள் வெளிப்படுத்திக் கொண்டனர்.

News August 23, 2025

கரூர்: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

கரூர் மாவட்ட கூட்டரங்கில் (25.08.2025) அன்று மாலை 4 மணிக்கு எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதனையடுத்து எரிவாயு நுகர்வோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அவர்கள் தெரிவித்தார்.

error: Content is protected !!