News January 17, 2026
கரும்பு மிச்சம் இருக்கா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!

பொங்கலுக்காக வாங்கிய கரும்பு மீதமாகிவிட்டால் கவலைப்படாதீங்க. முதலில் தோல் சீவிய கரும்புகளை துண்டுகளாக வெட்டி மிக்சியில் அரைத்து நன்றாக வடிகட்டி, சாறை தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். இதனை காய்ச்சி சிறிதளவு தண்ணீர், தேவையான அளவு தேயிலை சேர்த்து மீண்டும் கொதிக்க விடுங்கள். பின்னர் அதில் தேவையான அளவு பால் சேர்த்து கொதி வந்தவுடன் இறக்கி விடுங்கள். சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த ’கரும்பு தேநீர்’ ரெடி!
Similar News
News February 3, 2026
பதவிக்காக மகளை கால்வாயில் வீசி கொன்ற தந்தை!

மகாராஷ்டிரா ஊராட்சி தேர்தலில் போட்டியிட, 3 குழந்தைகளுக்கு தந்தையான பாண்டுரங்(28) ஆசைப்பட்டார். ஆனால், அம்மாநிலத்தில் 2 குழந்தைகள் உள்ளவர்களே தேர்தலில் போட்டியிட முடியும் என்ற விதி தடையாக இருந்தது. இதனால், மகளை கொல்ல முடிவு செய்து, 90 கி.மீ பயணித்து தெலங்கானாவுக்கு வந்து, மகளை கால்வாயில் வீசி கொன்றுள்ளார். தற்போது கடத்தல், கொலை வழக்குகளின் கீழ் அவர் கைதாகியுள்ளார். பதவி ஆசை எவ்வளவு கொடூரமானது!
News February 3, 2026
நாளை ₹1,200 வருகிறது.. அமைச்சர் அறிவித்தார்

60 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற முதியவர்களுக்கு மாதந்தோறும் ₹1,200 வழங்கப்படுகிறது. இதில் புதிதாக அப்ளை செய்திருந்த 1.80 லட்சம் முதியோர்களுக்கு நாளை இத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ஆதரவற்ற நிலையிலும், உணவுக்கு வழியில்லாமலும் கைவிடப்பட்டு நிற்கும் முதியோர்கள் இத்திட்டத்துக்கு Tamil Nadu e-Governance agency (TNeGA) என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
News February 3, 2026
இந்த துறைக்கு மட்டும் ஏன் இவ்வளவு நிதி?

நாட்டின் அனைத்து தரப்பு
மக்களையும் உள்ளடக்கிய
வளர்ச்சியே பட்ஜெட்டின் நோக்கம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். ராணுவத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை பற்றி பேசிய அவர், சிந்தூர் ஆபரேஷனுக்கு பிறகு பிற நாடுகள் ராணுவத்தில் அதிக முதலீடுகளை செய்யத் தொடங்கியிருப்பதாக கூறியுள்ளார். மேலும், இது யாரும் குறை கூற முடியாத பட்ஜெட் எனவும் பேசியுள்ளார்.


