News August 13, 2025

கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு சிறப்பு மானியம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 132 விவசாயிகளிடமிருந்து 10,712.387 டன் கரும்பு பெறப்பட உள்ளது. அகல பார் அமைத்து பருசீவல் நாற்று, ஒரு பருக்கரணை நடவு உள்ளிட்ட முறைகளுக்கு மாநில அரசு மற்றும் மத்திய திட்டங்கள் மூலம் ஹெக்டருக்கு ரூ.3,000 – ரூ.18,625 வரை மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் அதிக அளவில் கரும்பு நடவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 13, 2025

தி.மலை: B.Sc,,B.CA, M.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc,BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் வைவா நடத்தப்படும். விருப்பமுள்ளவர் <>இந்த லிங்கில்<<>> வரும் செ.9க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News August 13, 2025

அதிர்ச்சி: தி.மலை மாவட்டத்தில் 6,925 பேர் பாதிப்பு

image

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 20 பேர் நாய் கடித்து ரேபிஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். தி.மலை மாவட்டத்தில் ஜனவரி- ஆக.10 வரை சுமார் 6,925 பேரை தெருநாய்கள் கடித்திருப்பதாகவும், அதில் 3 பேர் உயிரிழந்ததாகவும் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உங்க ஏரியாவில் தெரு நாய் தொல்லை உள்ளதா? <>மாவட்டத்தின் அதிகாரபூர்வ தளத்தில் <<>>உள்ள நகராட்சி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News August 13, 2025

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் ஆர்வலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்குரிய விண்ணப்பப்படிவத்தினை தமிழ் வளர்ச்சித்துறையின் www.tamilvalarchithuraitn.gov. in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

error: Content is protected !!