News January 15, 2026
கரும்பு சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கலாமா?

கரும்பு சாப்பிட்டு முடித்து 15 நிமிடத்திற்கு பிறகே தண்ணீர் அருந்த வேண்டும். கரும்பில் உள்ள கால்சியம் சத்து, எச்சிலுடன் கலந்து வேதிவினை ஆற்றுகிறது. அந்த நேரத்தில் தண்ணீர் குடிக்கும்போது, அதிகமான சூட்டை கிளப்பும் எதிர்வினை நடக்கும். இதனால் நாக்கு வெந்து விடும். இதனை தவிர்க்க கொஞ்சம் இடைவெளி விட்டு தண்ணீர் அருந்த வேண்டும். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்கள்.
Similar News
News February 2, 2026
விஜய் ஊழல்வாதி தானே? திண்டுக்கல் சீனிவாசன்

பொது எதிரி என பாஜகவை கூறும் விஜய், அக்கட்சியை விமர்சிக்காதது ஏன் என திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுகவை ஊழல் கட்சி என விமர்சிக்கும் விஜய் ஊழல்வாதி தானே, அவர் சம்பாதித்தது கருப்பு பணமா, வெள்ளை பணமா என சாடினார். மேலும், ஆதவ் அர்ஜுனா நேர்மையான வழியில் சம்பாதித்தாரா என்றும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து சிறை சென்றவர் தானே செங்கோட்டையன் எனவும் விமர்சித்துள்ளார்.
News February 2, 2026
PM KISAN திட்டத்தின் நிதி ₹10,000?.. CLARITY

PM KISAN திட்டத்தின் கீழ், நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக மத்திய அரசு ₹6,000 வழங்கி வருகிறது. இந்த தொகையை ₹10,000 ஆக உயர்த்துமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், இதுதொடர்பாக பட்ஜெட்டில் அறிவிப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட நிலையில், அப்படி எதுவும் இடம்பெறவில்லை. இத்திட்டத்தின் 22-வது தவணைத் தொகை (₹6,000) இந்த வாரத்திற்குள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
News February 2, 2026
69 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!

ஒரு பிரசவமே கடினமாகிவிட்ட நிலையில், இவரின் கதை ஒரு அதிசயமே! ரஷ்யாவை சேர்ந்த Feodor Vassilyev என்பவரின் மனைவி, Valentina Vassilyev 1725- 1765 ஆண்டுகளுக்கு இடையில், 27 பிரசவங்களில் 69 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இதில் 16 இரட்டையர்கள்,7 triplets (ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்), 4 quadruplets (ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்) பிரசவங்களும் அடங்கும். அதிக குழந்தைகளை பெற்றெடுத்த கின்னஸ் சாதனை இவருடையதே!


