News January 7, 2025

கருப்பு வெறுப்பாகி போனதா?: நெல்லை முபாரக் கண்டனம்

image

சென்னையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கருப்பு துப்பட்டா அணிந்த பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்றிரவு(ஜன.6) வெளியிட்ட அறிக்கையில், ‘தோழமைக்கு அழகு அல்ல, கருப்பில் இருந்து பிறந்த கருப்பு சிவப்புக்கு கருப்பு வெறுப்பாகி போனதா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News February 14, 2026

திருநெல்வேலி: பைக் விபத்தில் சிறுவன் பலி

image

திருநெல்வேலி அருகே கிருஷ்ணாபுரம், கலைக்கோயில் நகரைச் சேர்ந்த முருகன் மகன் வெங்கடேஷ்(13) தனது சகோதரியின் பூப்புனித நீராட்டு விழாவைத் தொடர்ந்து நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. இதில் வெங்கடேஷ் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சா்வேஸ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து திருநெல்வேலி அருகே சிவந்திப்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 14, 2026

திருநெல்வேலி: 3 வயது குழந்தை பலி

image

திருநெல்வேலி கட்டாரங்குளத்தை சேர்ந்த பிரின்ஸ்(37) மற்றும் அவரது மனைவி, 3 வயது மகன் ரவினுடன் தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி அந்தோணியார் சர்ச்(பிப்12) திருவிழாவிற்காக வந்தார். ஊர் திரும்ப தற்காலிக பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தபோது, அப்போது பின்நோக்கி வந்த சிறப்பு பஸ்ஸின் சக்கரம் ஏறி எதிர்பாராமல் ரவின் உயிரிழந்தார். புளியம்பட்டி போலீசார் டிரைவர் முத்துவேலை(பிப்.13) கைது செய்தனர்.

News February 13, 2026

மாவட்டத்தில் இரவு பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (பிப்.13) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!