News March 21, 2024
கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு

நிலக்கோட்டை அருகே நூதலாபுரம் கிராமத்தில் திண்டுக்கல் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அமைய உள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது தொடர்பாக, பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மார்ச் 27ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்நிலையில், நிர்வாக காரணமாக அன்றைய தினம் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுகிறது என ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Similar News
News April 10, 2025
பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்

திண்டுக்கல் மாவட்ட தனி மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் பொது விநியோகத் திட்டம் தொடர்பாக சிறப்பு குறை தீர் முகாம் திட்ட அலுவலர்கள் தலைமையில் (12.04.2025 ) அன்று காலை 10 மணி முதல் நண்பகல் ஒரு மணி வரை நடைபெறும். பொதுமக்கள் நிகழ்வில் கலந்து கொண்டு ரேஷன் கார்டு சம்மந்தமான தங்கள் கோரிக்கைகளை மனுகளாக வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
News April 10, 2025
திண்டுக்கல்: மாணவர்களுக்கான ஒர் அரிய வாய்ப்பு

திண்டுக்கல் மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர் ,மிக பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர்களின் கூட்டமைப்பு நடத்தும் இளைஞர் மற்றும் மாணவர்களுக்கான பரிசு தொகையுடன் கூடிய ஆன்லைன் தேர்வு வருகிற மே11ந்தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க www.obcrights.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் .விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 14தேதி ஆகும். மாணவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News April 10, 2025
கடன் சுமை நீக்கும் அற்புத கோவில்

திண்டுக்கல், ராமலிங்கம்பட்டி அருகே அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் திருக்கோயில், பூமிக்கு அடியில் 16 அடி ஆழத்தில் உள்ள கருவறையில் முருகனை தரிசிக்கக் கூடிய சிறப்பு வாய்ந்த கோயிலாகும். இங்கு முருகனை தரிசிப்பதன் மூலம் தீராத கஷ்டம், தடைகள், குடும்பத்தில் சண்டை,கடன் சுமை போன்ற பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது. கடன் பிரச்சனையில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க