News March 16, 2026
கருத்துக்கணிப்பில் நம்பிக்கை இல்லை: RS பாரதி

இடையில் வருவதெல்லாம் கடந்து செல்லும் மேகங்கள் என விஜய்யை, திமுகவின் RS பாரதி சாடியுள்ளார். மேலும், கருத்துக்கணிப்புகளின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும், வரும் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும் எனவும் ஆருடம் தெரிவித்தார். லயோலாவின் IPDS, Times Now கருத்துக்கணிப்புகளில் திமுக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காது என கூறியுள்ள நிலையில், அது பேசுபொருளாக மாறியுள்ளது.
Similar News
News April 10, 2026
புதுக்கோடை: இளைஞர் உடல் நசுங்கி பலி – சோகம்

கீரனூர் அருகே கீழநாஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல்(20). கொத்தனாரான இவர், நேற்று முன்தினம் இரவு தனது பைக்கில் நண்கள் ஹரீஸ், பிரேம் ஆகியோருடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது மேல நாஞ்சூர்விலக்குக்கு வந்தபோது, பைக் – டிராக்டார் மோதியதில் பிரேம் சமபவிடத்திலே உடல் நசுங்கி பலியானார். மற்ற இருவர் படுகாயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News April 10, 2026
விஜய்யுடன் காங்கிரஸ்.. ஒரேநாளில் மாறியது

உண்மையான காங்., தவெக பக்கம் உள்ளது என விஜய் நேற்று முன்தினம் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இதனை தமிழக காங்., மறுத்துள்ளது. குறிப்பாக, விஜய்யுடன் காங்., இல்லை; திமுகவுடன் தான் கட்சி உள்ளது என நேற்று கர்நாடக DCM <<19608310>>சிவகுமார்<<>> வெளிப்படையாக கூறியிருந்தார். விஜய் கூறியதற்கு காங்., தேசியத் தலைவர்களும் மறுப்பு தெரிவித்து, ஒரேநாளில் விஜய்யின் கருத்தை மாற்றி தெளிவுபடுத்தியுள்ளனர்.
News April 10, 2026
இரண்டு கட்சிகளுக்கு ஒரே சின்னம்

தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், 2 அரசியல் கட்சிகளுக்கு ஒரே சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தனித்து போட்டியிடும் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகத்திற்கும், 30 தொகுதிகளில் போட்டியிடும் ராமதாசுக்கும் (PMK) சிலிண்டர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இருதரப்பும் போட்டியிடாத மற்ற தொகுதிகளில் இச்சின்னம் சுயேச்சைகளுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


