News August 7, 2024

கருணாநிதி படத்திற்கு மரியாதை செலுத்திய விழுப்புரம் எம்பி

image

விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளருமான ரவிக்குமார் இன்று (ஆகஸ்ட் 7) டெல்லியில் உள்ள கலைஞரின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6 ஆவது நினைவுநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள திமுக தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பங்கேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மரியாதை செலுத்தினார்.

Similar News

News July 11, 2025

குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

image

▶விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (ஜூலை 12) குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.
▶தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
▶ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
▶கருப்பு மை கொண்ட பேனா மட்டுமே அனுமதி.
▶காலை 9 மணிக்குள்ளேயே தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
▶வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய கூடாது.
தேர்வு எழுதும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News July 11, 2025

JUST NOW: மாவட்டக்கல்வி அலுவலர்கள் அதிரடி மற்றம்

image

மாவட்டக்கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம். விழுப்புரம் தனியார் பள்ளிகள் மா.கல்வி அலுவலர் சண்முகவேல் நெல்லை தொடக்கக்கல்வி மா.அலுவராகவும், திண்டிவனம் தொடக்கக்கல்வி மா.அலுவலர் அருள் விழுப்புரம் தனியார் பள்ளிகள் மா.கல்வி அலுவலராகவும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் விழுப்புரம் மா.தொடக்க கல்வி அலுவராக, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளிகள் மா.அலுவராக இருந்த துரைராஜ் நியமனம்செய்யப்பட்டு உள்ளார்.

News July 11, 2025

ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடு 1/2

image

இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, புதிய விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காப்பீடு, ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் வரையிலான செலவுகளை கவர் செய்யக்கூடியது. விபத்தில் உயிரிழந்தால் 100% காப்பீடு தொகை வழங்கப்படும். விபத்தில் எலும்புமுறிவு ஏற்பட்டால் ரூ.25,000 வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு விழுப்புரம் அஞ்சலகத்தை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. <<17028551>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!