News December 11, 2025
கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்குக: தமிழச்சி MP

Ex CM கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என MP தமிழச்சி தங்கப்பாண்டியன் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக மக்களவையில் பேசிய அவர், ஆட்சி அதிகாரத்தில் பிற இந்திய மாநிலங்களுக்கு கருணாநிதி முன்னுதாரணமாக திகழ்ந்தவர் என குறிப்பிட்டார். மேலும், சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் கருணாநிதி சாம்பியனாக திகழ்ந்தார் என்றும் கூறினார்.
Similar News
News March 9, 2026
ஈரான் போரை விவாதிக்க மறுப்பது ஏன்? ராகுல் காந்தி

மேற்கு ஆசிய போர் பதற்றத்தால் இந்தியா பெரிய பின்னடைவை சந்திக்கும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பங்குச்சந்தையின் வீழ்ச்சியே அதற்கு உதாரணம் என்றும், அதைப்பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிப்பதில் பாஜகவுக்கு என்ன பிரச்னை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். விவாதித்தால் PM மோடி எப்படி அமெரிக்காவால் பிளாக்மெயில் செய்யப்படுகிறார் என்பது வெளியே வந்துவிடும் என்பதால் பாஜக மறுப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
News March 9, 2026
வங்கி கணக்கில் ₹10,000.. தமிழக அரசின் HAPPY NEWS

தமிழ்நாடு வணிகர் நல வாரியம் சார்பில் சிறு வணிகர்களுக்கு அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. அதில், முக்கியமாக சிறுகடை அமைப்பதற்காக வணிகர்களுக்கு ₹10,000 வழங்கப்பட்டு வருகிறது. வணிகர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. வணிகர் நல வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (அ) அருகிலுள்ள வணிகர் நல வாரிய அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். SHARE IT
News March 9, 2026
உச்ச தலைவராக நீடிக்க எனது அங்கீகாரம் வேண்டும்: டிரம்ப்

ஈரானின் புதிய உயர் தலைவர் அமெரிக்காவின் ஒப்புதல் இன்றி நீண்ட காலம் பதவியில் நீடிக்க முடியாது என டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானுக்கு நல்ல தலைவரை நான் தேர்வு செய்வேன் என்றும், அதற்கு தகுதியான பலர் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஈரான் மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமிக்க முயற்சித்ததாகவும், தான் அதை தடுத்துவிட்டதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.


