News March 30, 2024

கருகல் நோய் தாக்குதலால் மல்லிகை பூ விவசாயிகள் வேதனை

image

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியான கண்ணியப்பிள்ளைபட்டி, பிச்சம்பட்டி,கதிர் நரசிங்கபுரம் போன்ற பகுதிகளில் மல்லிகை பூ சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் மல்லிகைப் பூக்களில் கருகல் நோய் ஏற்பட்டு பூக்கள் பாதிக்கப்படுவதால் மல்லிகை பூக்களின் வரத்து குறைந்து வருவதால் பூ விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Similar News

News February 9, 2026

தேனி அருகே பைக் விபத்தில் சிக்கிய தம்பதியினர்

image

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் அவரது மனைவியை அழைத்துக்கொண்டு திண்டுக்கல் தேனி பைபாஸ் சாலையில் நேற்று (பிப்.8) பைக்கில் சென்றுள்ளார். அப்பொழுது கருப்பையா என்பவர் ஓட்டி வந்த பைக் இவரது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் சுரேஷ் மற்றும் அவரது மனைவி படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

News February 9, 2026

தேனி: ஆட்டோ கவிழ்ந்து விபத்து; மூதாட்டி படுகாயம்

image

உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராம திலகம்(61). இவர் நேற்று (பிப்.08) கார்த்திகேயன் என்பவரது ஆட்டோவில் சின்னமனூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்விற்கு சென்றுள்ளார். ஆட்டோவை கார்த்திகேயன் அதிவேகமாக இயக்கிய நிலையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ராம திலகம் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு.

News February 9, 2026

தேனி: சொந்த வீடு வாங்க ஒரு அரிய வாய்ப்பு!

image

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு சார்பில் 2600 அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தற்போது 1400 வீடுகள் காலியாக உள்ளது. வீடுகள் தேவைப்படுவோர் சொந்த வீடு, நிலம் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு தேனி எஸ்.பி அலுவலகம் பின்புறம் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!