News March 21, 2026
கரண்ட் பில் அதிகமா வருதா? மீட்டரில் இத செக் பண்ணுங்க!

EB மீட்டர் வேகமாக இயங்குகிறது என சந்தேகம் இருந்தால், இப்படி செக் பண்ணுங்க. லைட், ஃபேன், ஏசி என அனைத்து மின்சாதன பொருள்களையும் Off செய்யவும். கனெக்ஷன்களை Plug-ல் இருந்து அகற்றவும். இப்போதும் EB மீட்டரில் உள்ள சிவப்பு விளக்கு அதிக பிரகாசத்துடன் ஒளிர்ந்தால், வீட்டு வயரிங்கில் கசிவு உள்ளது அல்லது மீட்டர் பழுதடைந்துள்ளது என அர்த்தம். இதனாலும் EB பில் அதிகமாக வரலாம். தாமதிக்காமல் உடனே சரி செய்யுங்க.
Similar News
News April 4, 2026
கேஸ் சிலிண்டர்.. அரசு அதிரடி அறிவிப்பு

நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், பெட்ரோலிய பொருள்கள், கேஸ் சிலிண்டர்களை பதுக்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பவர்களை தண்டிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் சிலிண்டர் விநியோகம் சீராக உள்ளதா?
News April 4, 2026
FCRA ஒரு குரூரமான சட்டம்: திமுக MP வில்சன்

வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு முறைப்படுத்துதல் சட்ட திருத்த மசோதாவை (FCRA) குரூரமான சட்டம் என திமுக MP வில்சன் குற்றஞ்சாட்டியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏற்கெனவே வக்பு சட்ட திருத்தம் மூலம் இஸ்லாமியர்களின் சொத்துகளை அடித்து பிடுங்கினார்கள். இன்று ஏழைகள் பயன்பெற கூடாது என துப்பாக்கி முனையில் வீட்டுக்குள் வந்து கொள்ளையடிக்கும் விதமாகவே FCRA சட்டத்தை கொண்டு வந்துள்ளனர் என சாடியுள்ளார்.
News April 4, 2026
CSK எப்பேற்பட்ட டீம் தெரியுமா? அஸ்வின்

CSK-வின் மோசமான தோல்விகள் ரசிகர்களை சோர்வடையச் செய்துள்ளன. இந்நிலையில், வெல்ல முடியாத அணியாக மீண்டும் CSK மாறும் என அஸ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். CSK எப்பேற்பட்ட அணி தெரியுமா? சென்னை டீம் என்கிற ஒரு கர்வத்தோட வாழுற ஆள் நான் என்று உணர்ச்சி பொங்க கூறியுள்ளார். தோனி வந்தால் அணிக்கு சாதகம் என்றும் ரசிகர்களுக்கு அவர் தெம்பூட்டியுள்ளார்.


