News April 1, 2026

கம்யூனிஸ்ட் ஆட்சி தொடர PM மோடி விருப்பம்: ராகுல் காந்தி

image

கேரளாவில் இடதுசாரி அணி வெற்றி பெற PM மோடி விரும்புவதாகவும், அதனாலேயே பினராயி விஜயனை அவர் விமர்சிப்பதில்லை என ராகுல் காந்தி சாடியுள்ளார். கம்யூ., – பாஜக இடையேயான ரகசிய கூட்டணியை வீழ்த்தி, கேரளாவில் காங்., தலைமையிலான ஆட்சியை மீண்டும் அமைப்பது உறுதி என்றார். இது தொடர்பாக பேசிய பினராயி, அரசியல் புரிதலின்றி ராகுல் பேசி வருவதாகவும், மக்களுக்கு உண்மை என்ன என்பது தெரியும் என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.

Similar News

News April 10, 2026

ஜன நாயகன் லீக்.. முதல்முறையாக பேசினார்

image

ஜன நாயகன் படத்தின் காட்சிகள் இணையத்தில் லீக்கானது படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், ரிலீஸுக்கு முன்பே லீக்காவது மிகப்பெரிய வலியை தருவதாக H.வினோத் வருத்தப்பட்டுள்ளார். ஒவ்வொரு காட்சியும் பலரது கனவை சுமந்துள்ளது; லீக்கான காட்சிகளை யாரும் ஷேர் செய்ய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஜன நாயகன் பிரச்னைக்கு பிறகு H.வினோத் முதல்முறையாக வெளிப்படையாக பதிவிட்டுள்ளார்.

News April 10, 2026

காலுக்​குள் இருக்​கிறேன் என கேவலமா பேசுறாங்க: EPS

image

கொரோனா காலத்தில் ஸ்டாலின் <<19603279>>காணா​மல் போனார்<<>> என்​று​தான் பேசினேனே ஒழிய, தவறாக பேச​வில்​லை என EPS விளக்கமளித்துள்ளார். ஆனால் தன்னை பார்த்து ஸ்டாலினும், உதயநிதியும் ’காலுக்​குள் இருக்​கிறேன்’ என தரக்குறைவாக விமர்சித்ததாக கூறிய அவர், தன்னால் இதை விட அதிகமாக திருப்பி பேச முடி​யும் என்றார். மேலும், எந்த ஆயுதம் எடுக்க வேண்​டும் என்பதை தீர்​மானிப்​பது நானல்ல, எதிரி​கள் தான் என்றார்.

News April 10, 2026

10, 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தத்தில் புதிய உத்தரவு!

image

தமிழகத்தில் 10,12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் விடைத்தாள்களை திருத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் தேர்வுத்துறை இயக்குநரகம் ஒரு முக்கிய அறிவுறுத்தலை மதிப்பீட்டு ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ளது. அதன்படி முழு மதிப்​பெண் (‘சென்​டம்’) பெறும் மாணவர்​களின் விடைத்​தாள்​களை கவன​மாக ஆய்வு செய்து ஒப்புதல் வழங்க வேண்டும் என சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!