News December 30, 2025
கம்பீரே தொடர்வார்: ராஜீவ் சுக்லா

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு <<18695088>>தனி பயிற்சியாளரை<<>> நியமிக்க BCCI திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், கம்பீரின் பதவிக்காலம் முடியும் வரை, அதாவது 2027 வரை அவரே பயிற்சியாளராக தொடர்வார் என BCCI துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கம்பீரை நீக்கும் எண்ணம் இல்லை எனவும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
Similar News
News January 1, 2026
CINEMA 360: விஷால் படத்தின் புதிய அப்டேட்!

*யோகி பாபுவின் 300-வது படத்திற்கு ‘அர்ஜுனன் பேர் பத்து’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. *விஷால் இயக்கி, நடிக்கும் ‘மகுடம்’ படம் 2026 கோடை விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது *விக்ராந்த் நடித்துள்ள ‘LBW:Love Beyond Wicket’ என்ற புதிய வெப் தொடர் ஹாட்ஸ்டாரில் வெளியானது. *அர்ஜுன் 6 வருடங்களுக்கு பின் மீண்டும் இயக்கியுள்ள ‘சீதா பயணம்’ படம் பிப்.14-ல் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
News January 1, 2026
2026-ல் எத்தனை ODI-களில் RO-KO விளையாடுவார்கள்?

2027 ஒருநாள் உலகக் கோப்பையை முன்னிட்டு, இந்திய அணி 2026-ல் 21 ODI போட்டிகளில் விளையாட உள்ளது. இதனால் ரோகித்-கோலி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். டெஸ்ட், டி20-யில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில், இருவரும் இந்தாண்டின் அனைத்து ODI-களிலும் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2025-ல் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் கோலி(651), ரோகித்(650) முதல் இரண்டு இடங்களை பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News January 1, 2026
ஃபோன் தண்ணீரில் விழுந்துருச்சா? DO THIS

உங்கள் போன் தண்ணீரில் விழுந்தால் ➤முதலில் அதனை SWITCH OFF பண்ணுங்க. ➤சார்ஜரில் கனெக்ட் செய்யவேண்டாம். இப்படி செய்தால் ஷார்ட் சர்க்யூட்டாகி போனின் பாகங்கள் சேதமாகிவிடும். ➤மொபைலில் இருந்து சிம் கார்டு, மெமரி கார்டு போன்றவற்றையும் அகற்றுங்கள் ➤காயும் வரை போனை ரீ-ஸ்டார்ட் செய்ய வேண்டாம். இவற்றை செய்தால் தண்ணீரில் விழுந்த உங்கள் போனில் எந்த பிரச்னையும் வராமல் பாதுகாக்கலாம். SHARE.


