News September 11, 2025

கம்பம் – நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற மனு

image

கம்பம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் 22 வார்டு உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் மற்றும் நகர் மன்ற துணைத் தலைவர் சுனோதா செல்வகுமார் ஆகியோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து தமிழ்நாடு நகர நிர்வாக சட்டம் 1998 51ன்படி நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்ற வேண்டி கம்பம் நகர ஆணையாளரை தொடர்ந்து தேனி ஆட்சியரிடம் (செப்.10) நேற்று மனு அளித்தனர்.

Similar News

News September 11, 2025

செப்.13 ல் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்)

image

தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் மூலம் வருகின்ற செப் 13-ம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளை சுமூகமாக தீர்க்க விரும்பும் வழக்காடிகள், வழக்கறிஞர்கள் அனைவரும் நடைபெற இருக்கும் தேசிய மக்கள் நீதிமன்றத்தை அணுகி பயனடையலாம் என நீதிபதி சொர்ணம் J.நடராஜன் தெரிவித்துள்ளார்.

News September 11, 2025

போடி: கடன் தொல்லையால் ஒருவர் தற்கொலை

image

போடி, மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் தயாளன் (50). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் குடும்ப செலவிற்காக அதிக அளவில் கடன் வாங்கி உள்ளார். கடனை திருப்பி செலுத்த முடியாமல் மன வேதனையில் இருந்து வந்த தயாளன் நேற்று (செப்.10) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

News September 11, 2025

தேனி: லாரி கவிழ்ந்து தலை சிக்கி டிரைவர் துடிதுடித்து பலி

image

ஆண்டிபட்டியை சேர்ந்தவர் பொன்கிருஷ்ணன். டிப்பர் லாரி ஓட்டுநராக இவர் நேற்று (செப்.10) வைகை அணை அருகே உள்ள தனியார் கல்குவாரியில் ஜல்லிக்கற்கள் ஏற்றுவதற்காக டிப்பர் லாரியை ஓட்டிச் சென்றார். வனவியல் கல்லுாரி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி ரோட்டின் ஓரத்தில் கவிழ்ந்தது. இடிபாடுகளில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்த பொன்கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். வைகை அணை போலீசார் வழக்கு பதிந்தனர்.

error: Content is protected !!