News March 13, 2026
கமேனியின் மனைவியும் கொல்லப்பட்டாரா?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதலில் ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து புதிய உயர் தலைவராக மொஜ்தபா கமேனி பொறுப்பெற்ற நிலையில் அயதுல்லா அலி கமேனியின் மனைவி மன்சௌரே கோஜஸ்தே பாகர்சாதே கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து திட்டவட்டமாக மறுத்துள்ள ஈரானின் ‘ஃபார்ஸ்’ ஊடகம், அவருடன் உயிருடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.
Similar News
News April 7, 2026
சிக்கலில் சிம்புவின் ‘அரசன்’

தீபாவளி ரிலீசை திட்டமிட்டு சிம்புவின் அரசன் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், சிம்புவின் சம்பளம் தொடர்பான வழக்கை சுட்டிக்காட்டி அரசன் ஷூட்டிங்கை தயாரிப்பாளர் சங்கம் & பெப்சி அமைப்பு நிறுத்தியுள்ளதாக டி.ராஜேந்தர் குற்றஞ்சாட்டியுள்ளார். வழக்கில் சிம்புவுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்த போதிலும், ஷூட்டிங்கை நிறுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News April 7, 2026
தங்கம் விலை மளமளவென குறைகிறது

தங்கம் விலை தொடர் ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது. ஆனால், USA வேலைவாய்ப்பு தரவுகள் சாதகமாக உள்ளதால், அந்நாட்டின் மத்திய வங்கி வட்டி விகிதத்தை மாற்றாது என எதிர்பார்க்கப்படுகிறது. இது டாலர் மதிப்பை வலுவடைய செய்யும் என்பதால், தங்கம் விலை சரிந்து சர்வதேச சந்தையில் 4,500 டாலருக்கு கீழ் வரக்கூடும். இதனால் உள்ளூர் சந்தையிலும் தங்கம் விலை அதிகளவில் குறைய வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
News April 7, 2026
FLASH: ஹரி நாடார் வேட்புமனு நிராகரிப்பு

ஆலங்குளம் தொகுதியில் ஹரி நாடாரின் வேட்புமனுவை தேர்தல் அலுவலர் நிராகரித்துள்ளார். அவர் சிறையில் இருந்தபடி முகவர் மூலம் வேட்புமனு தாக்கல் செய்தது விதிகளின்படி செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பனங்காட்டுப் படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜாவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ல், ஆலங்குளத்தில் ஹரி நாடார் 37,727 வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.


