News February 24, 2026
கமல்-ரஜினி சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கமலும் ரஜினியும் 47 ஆண்டுகளுக்கு பின் இணையும் படம் தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாபிக். புரோமோ வெளியானதில் இருந்து யார் ஹீரோ என்ற கேள்வி இருந்து வரும் நிலையில், இந்த படத்தில் இருவருமே வில்லன் தான் என தகவல் கசிந்துள்ளது. அத்துடன், இப்படத்திற்காக ரஜினி-கமல் இருவரும் தலா ₹150 கோடி சம்பளத்துக்கு ஒப்பந்தமாகி இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
Similar News
News March 2, 2026
பெரிதாகும் போர்.. ஈரானுடன் கைகோர்த்த ஹிஸ்புல்லா

ஈரானுக்கு ஆதரவாக போரில் களமிறங்கிய ஹிஸ்புல்லா அமைப்பினர், நள்ளிரவில் லெபனானில் இருந்து இஸ்ரேலை நோக்கி வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால் இத்தாக்குதலை முறியடித்துவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது. 2024 நவம்பரில் USA சமரசம் செய்ததால் இஸ்ரேல்-லெபனான் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது. அதன்பிறகு, இஸ்ரேலை ஹிஸ்புல்லா தாக்குவது இதுவே முதல் முறையாகும்.
News March 2, 2026
ஊழலுக்காக கலைக்கப்பட்ட திமுக அரசு: EPS

தமிழகத்திற்கு உரிய நிதியை ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சிப்பதாக CM ஸ்டாலின் தொடர்ச்சியாக கூறும் நிலையில், அதை EPS மறுத்துள்ளார். மோடி பொறுப்பேற்றதில் இருந்து தமிழக வளர்ச்சிக்கு பல ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மத்திய அரசு மீது அவதூறு பிரசாரத்தை திமுக பரப்புவதாக சாடிய EPS, ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு தான் என்றும் விமர்சித்தார்.
News March 2, 2026
டெய்லி டிபனாக தோசை சாப்பிடலாமா..?

இந்த கேள்வி உங்களுக்கு எழுந்தால், நல்லதுதான் என டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால், தோசையுடன் தானியங்கள், கறிவேப்பிலை, வெந்தயம், கீரை ஆகியவற்றை சேர்க்கவும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும், சட்னியில் புரோட்டின் நிறைந்த பாதாம், பிஸ்தாவையும் சேர்க்கலாம் என்கின்றனர். இது எடை அதிகரிக்க விரும்புவோருக்கு சிறந்த வழி எனவும் சுட்டிக்காட்டுகிறார்கள். நாளை உலக தோசை தினம். உங்களுக்கு பிடித்த தோசை வகை எது?


