News March 25, 2026

கமல் தேர்தலில் இருந்து விலக இதுதான் காரணமா?

image

வரும் தேர்தலில் மநீமவுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக வலியுறுத்தியது. இதனை மறுத்து பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் எந்த முன்னேற்றம் ஏற்படாத நிலையில் தான், தேர்தலில் போட்டியில்லை என அறிவித்தார் கமல். இந்நிலையில், திமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்றாலும் மநீமவுக்கு பலனில்லை என்பதால்தான் கமல் இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறார் என பேசப்படுகிறது.

Similar News

News April 9, 2026

கனிமொழி ஒரு செல்லாத காசு: EPS

image

கனிமொழி ஒரு செல்லாத காசு, திமுகவிலேயே அவருக்கு வேலையில்லை என EPS சாடியுள்ளார். ராயபுரத்தில் தேர்தல் பரப்புரை செய்த அவர், 2G வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. மற்றவர்களை நம்பி ஏதாவது பேசி மீண்டும் திஹாருக்கு சென்றுவிடாதீர்கள் என தெரிவித்துள்ளார். தோல்வி பயத்தில் EPS தரம் தாழ்ந்து பேசுவதாக <<19556166>>கனிமொழி <<>>கூறியதற்கு அவர் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.

News April 9, 2026

BREAKING: பள்ளிகள் விடுமுறை.. அறிவித்தது தமிழக அரசு

image

அனைத்து வகை அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஏப்.17 முதல் கோடை விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி (திங்கள்கிழமை) அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. SHARE IT

News April 9, 2026

BREAKING: ஜன நாயகன் படம் இணையத்தில் லீக்கானது

image

ஜன நாயகன் படத்தின் காட்சிகள் ரிலீஸுக்கு முன்னரே லீக்கானதால் படக்குழு அதிர்ச்சியடைந்தது. விஜய்யின் கடைசி படமான ஜன நாயகனின் 5 நிமிட காட்சிகள் சோஷியல் மீடியாக்களில் வெளியாகியுள்ளன. அவை செல்போனில் எடுக்கப்பட்டது போல தெரிகிறது. ஏற்கெனவே சென்சார் பிரச்னையால் படம் ரிலீஸாகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!