News January 29, 2026
கமல் கட்சிக்கு புதிய சிக்கல்

கமலின் மநீம-வுக்கு ECI டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கியிருந்தது. இந்நிலையில், திமுக கூட்டணியில் கமல் கட்சிக்கு ஒற்றை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. குறைந்தது 12 தொகுதிகளில் போட்டியிட்டால் தான் பொதுச்சின்னம் ஒதுக்கப்படும் என்பதால், மநீம டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட இயலாது. எனவே, மநீம வேட்பாளர்களை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க திமுக திட்டமிட்டுள்ளதாம்.
Similar News
News February 18, 2026
CAB-ல் குழந்தைகளுடன் போகும் பெற்றோர்கள் கவனத்திற்கு..

கடந்த 14-ம் தேதி, பெங்களூருவில் ஒரு தம்பதி 4 வயது மகனுடன் Cab-ல் பயணித்துள்ளார். இறங்கிய பிறகு, டிரைவருக்கு காசு கொடுக்க, கார் சென்றுவிட்டது. சிறிது நேரம் கழித்துதான், குழந்தையை காரிலேயே விட்டுவிட்டதை பெற்றோர்கள் உணர்ந்துள்ளனர். குழந்தை தூங்கிவிட்டதால், டிரைவருக்கும் குழந்தை இருந்தது தெரியவில்லை. டிரைவரின் நம்பர் ரீச் ஆகாததால், பிறகு போலீசாரின் உதவியுடன் குழந்தையை மீட்டுள்ளனர். என்னவென்று சொல்ல!
News February 18, 2026
ஒரே தேர்தலில் 4 விஜயகாந்த் போட்டி.. REWIND

2006 பேரவை தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் மறைந்த விஜயகாந்த் உள்பட 13 பேர் போட்டியிட்டனர். இதில் இவரைத் தவிர, கே, ச, எ ஆகிய இன்ஷில்களைக் கொண்ட 3 விஜயகாந்த் பெயர் கொண்டவர்கள் போட்டியிட்டிருந்தனர். அதேபோல், 2024 லோக்சபா தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டார். அப்போது, இதே ‘O’ இன்ஷியலில் 4 பன்னீர்செல்வமும், ‘M’ இன்ஷியலில் 1 பன்னீர்செல்வமும் போட்டியிட்டனர்.
News February 18, 2026
தவெகவுக்கு ‘நோ’.. செங்கோட்டையன் ஏமாற்றம்

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக EX அமைச்சர் ஒருவரை தவெகவில் இணைக்க செங்கோட்டையன் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அவர் தனக்கு திமுகவில் இருந்து அழைப்பு வந்துள்ளதாகவும், அங்கு செல்வதே சிறந்ததாக இருக்கும் என்றும் கூறிவிட்டதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இதனால் செங்கோட்டையன் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளார். ஏற்கெனவே வைத்திலிங்கத்தை தவெகவில் இணைக்கும் முயற்சி தோல்வி அடைந்தது.


