News December 29, 2025
கமலை இயக்குகிறாரா வெற்றிமாறன்? BLAST

சிம்புவை வைத்து ‘அரசன்’ படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இதனையடுத்து, ‘வடசென்னை 2’ படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், கமல்ஹாசனிடம் வெற்றிமாறன் கதை சொல்லியதாகவும், இதற்கு கமலும் ஓகே சொன்னதால் திரைக்கதை பணியில் வெற்றிமாறனின் குழு ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை இது சாத்தியமானால் கமல் படத்திற்கே வெற்றி முன்னுரிமை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News February 5, 2026
பின்தங்கிய தலைமுறையாக ஜென் Z!

ஜென் Z தலைமுறையினர் முந்தைய தலைமுறையினரை விட குறைவான IQ கொண்டுள்ளதாக சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. வரலாற்றிலேயே முந்தைய தலைமுறையை விட குறைவான IQ கொண்ட முதல் தலைமுறை எனவும், கல்வியில் டெக்னாலஜியின் அதீத பயன்பாடே இதற்கு காரணம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், AI பதில்களை அதிகம் சார்ந்திருப்பதால் சிந்திக்கும் திறனும் நினைவாற்றலும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
News February 5, 2026
எனக்கு சவக்குழி தோண்ட பார்க்கின்றனர் : PM மோடி

லோக்சபாவில் ஜனாதிபதி உரை மீதான விவாதம் நடைபெறாதது, ஏழை பழங்குடி பெண்ணான ஜனாதிபதிக்கு செய்யப்பட்ட அவமரியாதை என மோடி விமர்சித்துள்ளார். ராஜ்யசபாவில் பேசிய அவர், நாட்டின் சாமானிய மக்களை அவமதிப்பது என்பது காங்கிரஸ் கட்சியின் கலாசாரத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது என்று சாடினார். பாக்., பயங்கரவாத முகாம்களை அழித்ததற்காக எதிர்க்கட்சியினர் தனக்கு சவக்குழி தோண்ட பார்க்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
News February 5, 2026
நகம் வளரவே மாட்டேங்குதா? இதோ TIPS!

நகம் பார்ப்பதற்கு பளபளன்னு அழகாகவும், வலிமையாகவும் வளர நீங்கள் சில வழிகளை பின்பற்ற வேண்டும். ➤நகங்களை வெதுவெதுப்பான ஆலிவ் ஆயிலை கொண்டு மசாஜ் செய்யுங்கள் ➤தேவையான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம் ➤அவ்வப்போது நகங்களை வெட்டுங்கள் ➤நகத்தை கடிக்க வேண்டாம் ➤Polish Remover போன்ற ரசாயனங்களை பயன்படுத்தாதீங்க ➤நட்ஸ், சீட்ஸ், முட்டை போன்ற பயோடின் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். SHARE.


