News October 25, 2024
கன மழை எதிரொலி – பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுரை

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (அக்.26) கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே பள்ளிகளுக்கு வழக்கமான வார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை சிறப்பு வகுப்புகள் ஏதேனும் நடத்த உத்தேசித்துள்ள பள்ளிகள் அவற்றை நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News January 30, 2026
நெல்லை: இனி What’s App மூலம் ஆதார் அட்டை

நெல்லை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <
News January 30, 2026
நெல்லை: பட்டபகலில் அரசு அதிகாரி வீட்டில் கொள்ளை

பழைய பேட்டை சமூகரெங்கபுரத்தைச் சேர்ந்தவர் முத்துகுமார். போக்குவரத்து கழகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் நேற்று பகலில் தனது மனைவியுடன் வெளியே சென்றுள்ளார். பின்னர் மாலையில் வீடு திரும்பிய போது மாடியின் கதவு, பீரோ உடைக்கப்பட்டு 17 பவுன் நகை, ரூ.25,000 கொள்ளை போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
News January 30, 2026
JUST IN நெல்லைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

தைப்பூச பண்டிகை 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு இன்று(ஜன.30) இரவு 11.45 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது. நாளை காலை 11:15 மணிக்கு நெல்லை வந்து சேரும். மறு மார்க்கத்தில் இந்த ரயில் பிப்.1 அன்று இரவு 10:35 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை காலை 9:30 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.


