News March 17, 2025
கன்னியாகுமரி வருகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடுத்த மாதம்(ஏப்ரல்) முதல் வாரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார். குமரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான சுற்றுப்பயண விவரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில தினங்களில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 17, 2025
குமரி: செப்.25, அக்.10 மாணவர்களே MISS பண்ணாதீங்க

குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில்:
செப். 25-ந் தேதி மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியிலும்,
அக்.10ம் தேதி சுங் கான்கடை புனித சேவியர் பொறியியல் கல்லூரியிலும் சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது. முகாம்களில் மாணவர்கள் கலந்து கொண்டு கல்விக்கட னுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் https://pmvidyalakshmi.co.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
News September 17, 2025
குமரி: பிரிந்து சென்ற மனைவி; கணவர் தற்கொலை

பூதப்பாண்டி அருகே ஞாலம் பகுதி மெக்கானிக் மகேஷ்(37). 4 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தகராறில் 2 பிள்ளைகளுடன் இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். மனைவி பிரிந்த வருத்தத்தில் இருந்த மகேஷ் 2 நாட்களுக்கு முன்பு தடிக்காரன்கோணத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று (செப்.16) மகேஷ் உயிரிழந்தார். இதுக்குறித்து கீரிப்பாறை போலீசார் விசாரணை.
News September 17, 2025
குமரி: உங்க நகை சீட் பாதுகாப்பா இருக்கா??

குமரி மக்களே, நீங்க சிறுக சிறுக சேமித்த பணத்தை வருங்கால புன்கைக்காக நகை சீட் போடுவோம்.. எனவே நகை சீட் போடும் போது இதல்லாம் கவனியுங்க.
1.அரசு அங்கீகார நிறுவனம்
2. மாதாந்திர தொகை
3. தள்ளுபடி, செய்கூலிகள்
4.பணத்தை திரும்பபெறுதல்
5.ஆவணக்கட்டணம் மற்றும் ரசீதுகள்
ஏற்கனவே நகை சீட்ல உள்ளவங்களும் இதல்லாம் சரிபாருங்க.தகவல்களுக்கு: 1800-11-4000 (அ) 14404 அழையுங்க.. மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE…