News April 13, 2025
கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

காலை 11:30 மணி – ஆலங்கோட்டை சந்திப்பில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி ஆலங்கோட்டை சந்திப்பில் பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. எம்.ஆர் காந்தி எம்எல்ஏ கலந்து கொள்கிறார். மாலை 5 மணி – மத்திய அரசு தொண்டு வந்துள்ள வக்பு வாரிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு ஜமாத் உலமா சபை சார்பில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு பொதுக்கூட்டம் நடக்கிறது.
Similar News
News November 9, 2025
குமரி: பாதுகாப்பு பணியில் 500 போலீசார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெறுகிறது.5 மையங்களில் இத்தேர்வு நடைபெறும் நிலையில் இதற்கான ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது. இந்நிலையில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வுக்காக 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
News November 9, 2025
குமரி: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

விரிகோடு பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர் நேசமணி(62). 2020-ம் ஆண்டு இவர் அதேபகுதியை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது தொடர்பாக மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நாகர்கோவில் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கில் நீதிபதி சுந்தரய்யா, நேசமணிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
News November 9, 2025
குமரி: விபத்தில் சிக்கியவர் மருத்துவமனையில் உயிரிழப்பு

திற்பரப்பு பழைய பாலம் சாலையை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65). கூலித் தொழிலாளியான இவர் நவ.5-ம் தேதி வீட்டு முன்பு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வேன் இவர் மீது மோதியுள்ளது. ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட செல்வராஜ் சிகிட்சை பலனளிக்காமல் இன்று (நவ.8) உயிரிழந்தார். இது குறித்து குலசேகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


