News March 13, 2025
கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

#இன்று(மார்ச் 13) காலை 10 மணிக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடக்கிறது.#காலை 10 மணிக்கு திருக்கோவில் பணியாளர்களுக்கு அரசு ஆணைப்படி ஊதிய நிர்ணயம் செய்து வழங்க நிர்வாகத்தை கண்டித்து சுசீந்திரம் திருக்கோவில் அலுவலகம் முன்பு தொடர் தர்ணா போராட்டம் நடக்கிறது.
Similar News
News March 3, 2026
குமரி: விஷம் குடித்து டிரைவர் தற்கொலை

நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் இம்மானுவேல் (50). இவர் டிரைவர் ஆவார். இவருக்கு கடந்த ஒரு மாத காலமாக சிறுநீரக பிரச்சனை இருந்து வந்தது. இதனால், மனவேதனையில் இருந்த அவர் பார்வதிபுரம் பகுதியில் களைக்கொல்லி விஷம் மருந்தை குடித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார். இது தொடர்பாக, இரணியல் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
News March 2, 2026
குமரி: ஓடும் ரயிலில் விழுந்து ஒருவர் பலி

அம்மாண்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர் அஜின் (29 ). கபடி வீரரான இவர் தனது நண்பர்களுடன் சென்னையில் உள்ள நண்பரை பார்ப்பதற்காக நேற்று மாலை கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றனர். தளபதி சமுத்திரம் பகுதியில் ரெயில் சென்று கொண்டிருந்தபோது அஜின் ரயில் பெட்டியில் இருந்து கீழே தவறி விழுந்தார். இதில் தலையில் அடிபட்டு அவர் உயிரிழந்த நிலையில் நாகர்கோவில் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News March 2, 2026
குமரி : இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

குமரி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!


