News February 23, 2026

கன்னியாகுமரி மாவட்டத்தில் 60 போலீஸ் SI இடமாற்றம்

image

சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் 3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலாக பணியாற்றி வரும் SI-க்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் குமரி மாவட்டத்தில் பணியாற்றி வந்த 60 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ராஜாக்கமங்கலம் ஜான் போஸ்கோ, தக்கலை ஆண்டோ கெவின், நேசமணி நகர் விஜயன், கன்னியாகுமரி வினிஷ்பாபு, ஆசாரிப்பள்ளம் சத்திய சோபன், ராஜன் உட்பட 60 பேர் மாற்றப்பட்டுள்ளனர்.

Similar News

News February 24, 2026

குமரி: கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை

image

துண்டத்துவிளை பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (21). பட்டதாரியான இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற நிலையில் வேலை பிடிக்காமல் 1மாதத்திற்கு முன் திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் ஒரு பெண்ணை காதலித்த அவர் திருமணம் செய்ய சம்மதம் கேட்டதற்கு பெண் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று அவர் அந்த பெண்ணிற்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு

News February 23, 2026

குமரி : சிலிண்டர் புக் பண்ண இனி MISSED CALL…!

image

குமரி மக்களே, (Bharatgas, HP, Indane) கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும்.
Bharatgas: 77150 12345
HP: 94936 02222
Indane:84549 55555
இந்த எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் போது கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க.

News February 23, 2026

குமரியில் 2 ட்ரோன்கள் பறக்க தடை – ஆட்சியர் அறிவிப்பு

image

குமரி ஆட்சியர் அழகு மீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பு – தமிழக முதல்வர் குமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால் 24.02.2026 மற்றும் 25.02.2026 ஆகிய நாட்களில் குமரி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி கன்னியாகுமரி மாவட்டத்தில் ட்ரோன்கள் & இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

error: Content is protected !!