News September 26, 2025
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் கனமழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை தொடர்கிறது. மணலோடையில் 180.8 மி.மீ, அருமனையில் 175.6 மி.மீ, எடைக்கோட்டில் 160.8 மி.மீ என பல இடங்களில் 100 மி.மீக்கு மேல் மழை பதிவானது. ஆறுகள் நிரம்பி ஓட, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி சில இடங்களில் வனத்துறை நுழைவை தற்காலிகமாக கட்டுப்படுத்தியுள்ளது.
Similar News
News January 30, 2026
குமரி: கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் போலீசார் நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது பள்ளம்பாலம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது கண்டன்விளை பகுதியை சேர்ந்த ரெஜிஸ் என்ற வாலிபர் 1.20 கிலோ கஞ்சா வைத்திருப்பது தெரிந்தது. உடனே அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் ரெஜிஸ் மீது வழக்குப்பதிவு செய்து இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.
News January 30, 2026
குமரி: வாகன ஓட்டிகளுக்கு SP எச்சரிக்கை

குமரியில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே கனரக வாகனங்கள் மாவட்டத்திற்குள் வருவதற்கு SP உத்தரவிட்டுள்ளார். இந்த நேர கட்டுப்பாட்டை மீறி வந்த 4 கனரக வாகனங்கள் மீது நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று அபராதம் விதித்தனர். இந்நிலையில் நேர கட்டுப்பாட்டை மீறி கனரக வாகனங்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என SP எச்சரிக்கை.
News January 30, 2026
குமரி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

குமரி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <


