News December 15, 2024
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

இன்று (டிச.15) காலை 10 மணி ஆலன்விலை பங்கு பேரவை சார்பில் ஆளன் அன்னைநிதி நிதி நிறுவனத்தில் பணத்தை திருப்பி கொடுக்காததை கண்டித்து கிராம மக்கள் சார்பில் பாலன்விளை படிப்பகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மாலை 4 மணிக்கு மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் அருகில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
Similar News
News March 9, 2026
குமரி: ரேஷன் கடைக்கு போக வேண்டாம்! இந்த நம்பர் போதும்!

குமரி மாவட்ட மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
News March 9, 2026
குமரி: காங்கிரஸ் கட்சியினர் தொடர் நடை பயணம்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக 8வது நாளாக கண்டன நடைபயணம் நேற்று (மார்ச் 8) நடைபெற்றது. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் காந்தியடிகள் பெயரை நீக்கியதை கண்டித்து கோழிப்போர்விளை முதல் முளகுமூடு வரை இந்த நடைபயணம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகி லாரன்ஸ் தலைமை வகித்தார். இதில், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
News March 9, 2026
நாகர்கோவிலில் 16 வயது சிறுமி கர்ப்பம்.. சிறுவன் கைது

நாகர்கோவிலை சேர்ந்த 17 வயது சிறுவனும், 16 வயது மாணவியும் பழகி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் மாணவியை ஆசை வார்த்தை கூறி மிரட்டி சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் மாணவி கர்ப்பமானார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் 17 வயது சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.


