News December 24, 2025
கன்னியாகுமரி: மாடு வளர்பவரா நீங்கள்? கட்டாயம் செய்யணும்!

குமரி மாவட்டத்தில் சுமார் 58400 கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் ஆகியோர்களை கொண்ட 52 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. டிச.29 முதல் அடுத்த மாதம் 28-ம் தேதி வரை இந்த முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
Similar News
News December 25, 2025
குமரி: ரயில் மீது கல் வீசிய சிறுவன் கைது

காந்திதாம் – திருநெல்வேலிக்கு வாரம் ஒரு முறை இயக்கப்படும் ஹம்சபர் ரயில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் அருகே வந்த போது 16 வயது சிறுவன் ஒருவன் ரயில் பெட்டி மீது கல் வீசியதாக கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவனை கைது செய்தனர். பின்னர் அந்த சிறுவன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நெல்லையில் உள்ள சிறார் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
News December 25, 2025
குமரி: விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை!

கொடுப்பைக்குழி கட்டிடத்தொழிலாளி சந்திரன் (50). திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார். அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
News December 25, 2025
குமரி: இனி வரிசைல நிக்காதிங்க.. எல்லாமே ONLINE..!

குமரி மக்களே, இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு போய் நீண்ட நேரம் வரிசைல நின்னு காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இனி நீங்க இங்கு<


