News April 13, 2024

கன்னியாகுமரி மழைப்பொழிவு விவரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்திற்கான நேற்றைய (ஏப்.12) மழைப்பொழிவு விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.ரல்வாய்மொழி, திருப்பதிசாரம் ஏடபிள்யூஎஸ், நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் 3 செ.மீ, கன்னடயன் பாலமோர்,முக்கடல் அணை பகுதிகளில் 2 செ.மீ, கொளச்சல், பெருஞ்சாணி அணை, மாம்பழத்துறையாறு, புத்தன்அணை, கன்னியாகுமரி, அணைகெடங்கு,சூரலக்கோடு, மயிலாடி, தக்கலை ஆகிய பகுதிகளில் 1 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

Similar News

News November 19, 2024

சுசீந்திரம் கோவிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரிசனம்

image

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் ஶ்ரீ தாணுமாலய சுவாமி திருக்கோவிலில் இன்று (நவ.19) நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார். மேலும் அங்குள்ள சுற்று பிரகாரத்தை சுற்றி மனம் உருகி பிரார்த்தனை செய்தார். தொடர்ந்து அங்கு வந்த பக்தர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

News November 19, 2024

குமரியில் திடீர் ஆய்வு – 11 கடைகளுக்கு அபராதம்

image

குமரி பேரூராட்சி & உணவு பாதுகாப்பு துறை இணைந்து குமரியில் உள்ள கடைகள், தற்காலிக உணவு கடை என 60 கடைகளில் இன்று (நவ.19) ஆய்வு நடத்தியது. இதில் 7 கிலோ பிளாஸ்டிக் பை, 18 கிபிளாஸ்டிக் தட்டுகள் பறிமுதலுடன், காகிதத்தில் வைத்த 5 கிலோ வடை, பஜ்ஜி, சமோசா உணவு அழிக்கப்பட்டன. சுகாதாரமற்ற 3 உணவகங்களுக்கு ரூ. 3000 அபராதமும், பிளாஸ்டிக் வைத்திருந்த 8 கடைகளுக்கு தலா 2000 வீதம் ரூ.16000 அபராதம் விதிக்கப்பட்டது.

News November 19, 2024

கிறிஸ்மஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் நீட்டிப்பு

image

நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இதைப் போன்று தாம்பரத்திலிருந்தும் நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.