News September 18, 2025

கன்னியாகுமரி பகவதி அம்மன் நவராத்திரி திருவிழா தேதி!

image

பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலய நவராத்திரி திருவிழா வரும்  செப்.23ம் தேதி துவங்கி அக்டோபர் 2ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.  விழா நாட்களில் பல்வேறு பூஜைகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 10ம் திருவிழா நாளான அக்டோபர் 2ம் தேதி  காலை அம்மன் வெள்ளி குதிரைவாகனத்தில் பரிவேட்டைக்கு புறப்படுதல், இரவு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆறாட்டு  ஆகியன நடக்கிறது.

Similar News

News March 3, 2026

குமரி: சொத்து பத்திரம் இனி உங்க போனில்

image

குமரி மாவட்ட மக்களே, <>இங்கு க்ளிக்<<>> செய்து தமிழக அரசின் TNREGINET செயலியை உங்க போனில் Install பண்ணி ஐ.டி உருவாக்குங்க.. அதில் மின்னணு சேவைகள் > சான்றளிக்கப்பட்ட நகல் > தேடுதல் சென்று பத்திரம் எண், ஆண்டு பதிவிடுங்க.. அவ்வளவுதான் CC கோரிக்கை பட்டியலில் டிஜிட்டல் கையொப்பமிட்ட நகல் பத்திரத்தை பெற்று கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…

News March 3, 2026

குமரி: விஷம் குடித்து டிரைவர் தற்கொலை

image

நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் இம்மானுவேல் (50). இவர் டிரைவர் ஆவார். இவருக்கு கடந்த ஒரு மாத காலமாக சிறுநீரக பிரச்சனை இருந்து வந்தது. இதனால், மனவேதனையில் இருந்த அவர் பார்வதிபுரம் பகுதியில் களைக்கொல்லி விஷம் மருந்தை குடித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார். இது தொடர்பாக, இரணியல் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

News March 2, 2026

குமரி: ஓடும் ரயிலில் விழுந்து ஒருவர் பலி

image

அம்மாண்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர் அஜின் (29 ). கபடி வீரரான இவர் தனது நண்பர்களுடன் சென்னையில் உள்ள நண்பரை பார்ப்பதற்காக நேற்று மாலை கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றனர். தளபதி சமுத்திரம் பகுதியில் ரெயில் சென்று கொண்டிருந்தபோது அஜின் ரயில் பெட்டியில் இருந்து கீழே தவறி விழுந்தார். இதில் தலையில் அடிபட்டு அவர் உயிரிழந்த நிலையில் நாகர்கோவில் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!