News March 29, 2024
கன்னியாகுமரி அருகே கோர விபத்து

குமரி மாவட்டம் வெள்ளமடம் அருகே லாயம் சந்திப்பில் இன்று கனிம வளங்களை ஏற்றி வந்த டாரஸ் லாரி சாலை ஓரத்தில் நின்ற டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது மோதி அருகாமையில் இருந்த வீட்டின் மதில் சுவரை இடித்து நின்றது. இந்த விபத்தில் கார், டிராக்டர், மோட்டார் சைக்கிள் முழுவதும் சேதமடைந்தது. அதிஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.
Similar News
News February 8, 2026
குமரி: சங்கு எடுக்க முயன்ற மீனவர் பரிதாப பலி

இனயம் நடுத்தேரி பகுதியை சேர்ந்த ஏசுபாலன் 2 பேருடன் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் தேங்காப்பட்டினம் கடல் பகுதியில் சங்கு எடுப்பதற்காக சென்றார். சங்கு எடுத்து கொண்டிருக்கும்போது மூவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் வெளியே வந்த மூவரையும் மீனவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் ஏசுபாலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக குளச்சல் கடலோர பாதுகாப்பு குழு போலீசார் வழக்குப்பதிவு.
News February 7, 2026
குமரியில் இரவு காவல் ரோந்து அதிகாரிகள் அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, இன்றைய (07.02.2026) இரவு ரோந்து அதிகாரிகள் குறித்த அட்டவணை தகவல்கள் வெளியாகி உள்ளது. உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தாலும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிற்கு உடனே அழையுங்கள் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
News February 7, 2026
குமரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.


