News May 2, 2024

கன்னியாகுமரியில் மழைக்கு வாய்ப்பு!

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (மே.02) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

Similar News

News November 4, 2025

குமரி: இனி நீங்க வங்கி போக தேவை இல்லை!

image

குமரி மக்களே, உங்க வங்கில Balance எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனிமே வங்கிக்கும் இல்ல அடிக்கடி UPI – ஐ திறந்து பாக்க தேவை இல்லை
Indian bank : 87544 24242
SBI:  90226 90226
HDFC : 70700 22222
Axis : 7036165000
Canara Bank – 1800 1030
உங்க வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க…

News November 4, 2025

குமரி அருகே விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

image

குளச்சல் புளிமூட்டுவிளையை சேர்ந்தவர் கொத்தனார் விக்னேஷ்(29). நேற்று(நவ.3) இவர் அம்மாண்டிவிளையில் உள்ள மனைவியின் வீட்டுக்குச்சென்று விட்டு பைக்கில் பரப்பற்று பகுதியில் வந்த போது முன்னால் சென்ற காரை முந்த முயன்றுள்ளார். அப்போது திடீரென எதிரில் வந்த லாரி பைக் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட விக்னேஷ் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 4, 2025

குமரி: ரூ.35,400 ஊதியத்தில் ரயில்வே வேலை

image

இந்திய ரயில்வே துறையில் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 5,810 காலியிடங்கள் (தமிழ்நாடு -213) அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 18 வயது நிரம்பியவர்கள் www.rrbchennai.gov.in என்ற தளத்தில் நவ.20 க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.25,500 – ரூ.35,400 வரை வழங்கப்படும். இத்தகவலை டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!