News December 14, 2025
கன்னியாகுமரியில் கட்டுப்பாடு விதித்த எஸ்பி

மருங்கூர் அருகே தனியார் ரிசார்ட் ஒன்றில் அண்மையில் போதைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டதை தொடர்ந்து, அதில் தொடர்புடைய 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் ரிசார்ட் மற்றும் ஹோட்டல்கள் அனுமதியின்றி நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News December 16, 2025
குமரி: டிகிரி போதும்.. ரூ.85,920 வரை சம்பளம்! APPLY NOW

குமரி மக்களே, Bank of Barodaவின் துணை வங்கியில் (Nainital Bank Limited) பல்வேறு பணிகளுக்கு 185 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரம்பிய ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன.01க்குள் இங்கு <
News December 16, 2025
குமரி: திமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை!

திருவட்டாறு தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருப்பவர் அரசு ஒப்பந்ததாரர் அருண்பால் (39). இவருக்கும், மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழக்கு பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று இதன் தீர்ப்பு வர இருந்த நிலையில், அதிகாலை அருண்பால் குட்டக்குழியில் உள்ள வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து திருவட்டாறு போலீசார் விசாரணை.
News December 16, 2025
குமரி: தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

வேம்பனூரை சேர்ந்தவர் ஜெயசேகரன்(50). செட்டிக்குளம் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலைபார்த்த இவர் அகஸ்தீஸ்வரம் பள்ளிக்கூட தெருவில் வசித்து வந்தார். நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத போது படுக்கை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தென்தாமரைக்குளம் போலீசார் விசாரணை.


