News April 9, 2025
கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

பண்டிகையை கால கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சேலம், நாமக்கல், மதுரை வழியாக சென்னை சென்ட்ரல் – கன்னியாகுமரி வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (வ. எண் 06089 ) ஏப்ரல் 10 &17 ஆகிய இரு தினங்களிலும் சென்னை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரி புறப்படும் மறுமார்க்கத்தில் (வ.எண் 06090 ) ஏப்ரல் 11 & 18 கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை இயக்கப்படும் என அறிவிப்பு. *ஷேர் பண்ணுங்க
Similar News
News April 17, 2025
குமரியில் ரூ.15 ஆயிரத்தில் வேலை

தேசிய காசநோய் ஒழிப்பு தடுப்பு திட்டத்தில் மாவட்ட மருந்தாளுநர் பணிக்கு 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பு ஊதியத்தில் பணி புரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு டிகிரி கட்டாயம். சம்பளம் ரூ.15 ஆயிரம். 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். துணை இயக்குநர் மருத்துவப் பணிகள், மாவட்ட காசநோய் மையம்,குமரி அரசு மருத்துவ கல்லூரி,ஆசாரிபள்ளம் என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை ஏப்.30க்குள் அனுப்ப வேண்டும்
News April 17, 2025
மார்ச்.24ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 24ம் தேதி முற்பகல் 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து மார்ச் 2025 மாத விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட விவசாயம் தொடர்பான மனுக்களுக்கான பதில்கள் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 17, 2025
மகளிர் சுய உதவிக் குழுக்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பு, மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் சுய உதவி குழுக்கள் சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. குமரி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக் குழுக்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் செயல்படும் ஊரக நகர் புற வாழ்வாதார இயக்க அளவில் வரும் 30ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.