News December 20, 2025
கன்னக்குழி அழகி சித்தி இத்னானி

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சித்தி இத்னானி. இவர் தற்போது அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ரெட்ட தல’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். கன்னக்குழி சிரிப்பழகால் அனைவரையும் காதல் வலையில் சிக்க வைக்கும் அவரின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரலாகியுள்ளது. சிரிப்பால் கவிபாடும் இத்னானிக்கு ஹார்டின்களை ரசிகர்கள் பறக்கவிட்டு வருகின்றனர்.
Similar News
News December 28, 2025
₹50 கட்டினால் போதும், ₹35 லட்சம் வரை கிடைக்கும் திட்டம்

Post Office-ன் கிராம சுரக்ஷா யோஜனா திட்டத்தில் தினமும் 19 வயதிலிருந்து ₹50 கட்டினால், 80 வயதாகும் போது அதிகபட்சமாக ₹35 லட்சம் வரை கிடைக்கும். இதில், 55 வயதுக்குட்பட்டவர்கள் சேரலாம். திட்டத்தில் சேர்ந்தவர் மெச்சூரிட்டி தொகையை பெறும் முன் இறக்க நேர்ந்தால், நாமினிக்கு அந்த தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர அருகில் உள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 28, 2025
இனி ஒரு தம் 72 ரூபாய்.. அதிர்ச்சி

புகையிலைப் பொருள்கள் மீதான வரியை அதிகரிக்கும் வகையில் கலால் வரி திருத்த மசோதாவை கொண்டு வர உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன் காரணமாக, குறைந்த விலையில்(₹18) கிடைக்கும் ஒரு சிகரெட்டின் விலை, இனி ₹72-ஆக உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது சிகரெட் பழக்கத்தை கட்டுப்படுத்த உதவும் என்பதால், இந்த விலையேற்றத்தை வரவேற்று பலரும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
News December 28, 2025
நாட்டின் முதல் ‘Gen Z’ நகராட்சி மன்ற தலைவர்!

இளம் தலைமுறையான Gen Z-யும் அரசியல் ஆளுமைகளாக மாறிவருகின்றனர். கேரளாவின் கோட்டயத்திற்கு உட்பட்ட பாலா பகுதியின் நகராட்சி மன்ற தலைவராக தியா பினு புல்லிக்காக்கண்டம்(21) தேர்வாகியுள்ளார். சுயேட்சையாக போட்டியிட்ட இவரே நாட்டின் இளம் நகராட்சி தலைவராவார். காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆதரவுடன் தியா நகராட்சி மன்ற தலைவராகியுள்ளார். இவரது தந்தை அப்பகுதியின் கவுன்சிலராக 5 முறை தேர்வாகியுள்ளார்.


