News January 20, 2025
கனிம வள கொள்ளை: பாஜக தென்காசி தலைவர் ஆவேசம்

தென்காசி மாவட்ட புதிய பாஜக தலைவர் ஆனந்தன் நேற்று(ஜன.19) கூறியதாவது, தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், ஆலங்குளம், சங்கரன்கோவில் தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற அனைத்து பூர்வாங்க பணிகளும் கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்படும். அதிகமான அளவில் சூறையாடப்படும் கனிமவள கொள்ளை தொடர்பான ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மாநில தலைமை ஆலோசனையின்படி நடத்தப்படும் என்றார்.
Similar News
News September 30, 2025
தென்காசி: ஆடு ஏறியதால் மோதல்!

தென்காசி, கடையம் அருகே அழகம்மாள்புரத்தை சேர்ந்த முருகன் (42) வீட்டில் இசக்கி வளர்க்கும் ஆடுகள் கூரை மீது ஏறியதால் முருகன் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த இசக்கி மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 5 பேர் முருகனையும் அவரது மனைவி மாரியம்மாள் மற்றும் குடும்பத்தினரையும் தாக்கினர். இதுக்குறித்து கடையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
News September 30, 2025
தென்காசி TNPSC தேர்வில் இத்தனை பேர் அப்செண்டா??

தென்காசி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை ஞாயிற்றுக்கிழமை 11,993 பேர் எழுதினர். மொத்தம் 14,980 தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 2,987 பேர் தேர்வில் கலந்துகொள்ளவில்லை. 53 மையங்களில் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெற்றது. தேர்வு மையத்தை ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் சில தேர்வு மையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
News September 29, 2025
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (29-09-25) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100 ஐ தொடர்பு கொள்ளலாம்.