News September 22, 2024
கனிம வளம் ஏற்றி சென்ற 24 வாகனங்கள் பறிமுதல்

குமரி மாவட்டம் அஞ்சு கிராமம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாகனங்களில் அளவுக்கு அதிகமாக கனிம வளங்கள் ஏற்றிச் செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிக கனிம வளங்களை ஏற்றிச் சென்ற 24 வாகனங்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவைகளை பறிமுதல் செய்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 19, 2025
குமரி: காவல்துறை இரவு ரோந்து அதிகாரிகள் பட்டியல்

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை இன்று (18.08.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அலுவலர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. கோட்டார், நாகர்கோவில், மார்த்தாண்டம், குளச்சல், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் SSI மற்றும் HC நிலை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலங்களில் 04652-220417 மற்றும் அலுவலர்களின் மொபைல் எண்களை தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.
News August 18, 2025
குமரி மாவட்ட ஆட்சியரிடம் மடிக்கணினி பெற்ற மாணவன்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில், அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIIT) உயர்கல்வி பயில உள்ள மாணவன், மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனாவை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மாணவனுக்கு ஆட்சியர் அழகு மீனா மடிக்கணினி வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
News August 18, 2025
முன்னாள் இராணுவ வீரர்களின் குறை தீர்க்கும் நாள்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர். அழகு மீனா தலைமையில் மாவட்ட அலுவலக ஆட்சியகத்தின் அலுவலகத்தில் உள்ள குறள் கூட்டரங்கில் முன்னாள் இராணுவ படைவீரர் குறைதீர்க்கும் கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்தில் ஏராளமான முன்னாள் ராணுவ வீரராகள் கலந்து கொண்ட நிலையில் முன்னாள் இராணுவ வீரர்களின் மனுக்கள் மற்றும் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.