News March 28, 2026
கனிமொழி வேட்பாளராக களமிறங்காதது ஏன்?

திமுக MP-ஆக உள்ள கனிமொழி, சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வேண்டுமென்று <<19491676>>நாடார், நாட்டுப்புற கலைஞர்கள்<<>> அமைப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். மாநில அரசியலுக்கு கனிமொழி வருவதை திமுக தலைமை விரும்பவில்லை என வானதி, சீமான் உள்ளிட்டோரும் விமர்சித்தனர். இந்நிலையில் கனிமொழி டெல்லி அரசியலில் தொடரவே தலைமை விரும்புவதால் MLA வேட்பாளராக அறிவிக்கவில்லை என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 6, 2026
நடிகை சுபாஷினி மரணம்.. உருக்கமான தகவல்

‘கயல்’ சீரியல் <<19578782>>நடிகை சுபாஷினியின் தற்கொலை<<>> சின்னத்திரை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வரும் 12-ம் தேதி அவருக்கு பிறந்த நாள். மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய குடும்பம் தற்போது கண்ணீரில் தத்தளிக்கிறது. அதுமட்டுமின்றி, வரும் 21-ம் தேதி சுபாஷினிக்கு 2-ம் ஆண்டு திருமண நாளாகும். தன் வாழ்வில் முக்கிய மாதமாக இருக்கும் ஏப்ரலிலேயே சுபாஷினி தற்கொலை செய்திருப்பது பெரும் சோகம். RIP
News April 6, 2026
3 மேட்ச்சில் வெறும் 24 ரன்கள்.. கிரீன் பரிதாபங்கள்

KKR அணியால் ஏலத்தில் ₹25.20 கோடிக்கு வாங்கப்பட்ட கேமரூன் கிரீன் நடப்பு IPL-ல் மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்திருக்கிறார். கடந்த 3 போட்டிகளில் அவர் 24 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மேலும், இன்னும் சில போட்டிகளுக்கு பிறகே அவர் பந்துவீசுவார் என கூறப்படுகிறது. இவ்வளவு பெரிய தொகைக்கு எடுத்த வீரர் சரியாக ஆடாதது KKR ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
News April 6, 2026
தமிழ்நாட்டில் அடுத்து யார் ஆட்சி.. புதிய கருத்துக்கணிப்பு

தமிழக தேர்தலையொட்டி Inside Election அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது. அதில், 44% வாக்குகளுடன் 159 – 165 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 64 – 70 இடங்களில் (33% வாக்குகள்) அதிமுக கூட்டணியும், 4 – 6 தொகுதிகளில் (18% வாக்குகள்) தவெகவும் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாதக 3% வாக்குகளை பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. SHARE IT


