News April 12, 2024
கனிமொழி கீதம் ஆடியோ வெளியீடு

கோவில்பட்டியை சேர்ந்த வழக்கறிஞர் அழகர்சாமி தயாரிப்பில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக கனிமொழி கீதம் பாடல் ஆடியோ இன்று வெளியிடப்பட்டது. பாடல் ஆடியோவை கனிமொழி கருணாநிதி இன்று வெளியிட்டார். இதில் ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News April 30, 2025
செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் கைது

உத்திரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் (23) எட்டையாபுரம் சாலையில் நடந்து சென்றபோது இவரின் 120000 ரூபாய் மதிப்புள்ள செல்போனை, சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த அருண்குமார் (22), மாடசாமி (24), முத்துசெல்வம் (20), முத்தீஸ்வரன் (27) ஆகிய நான்கு பேரும், பறித்துச் சென்றுள்ளனர். இதனை அடுத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நான்கு பேரையும் விளாத்திகுளம் போலீசார் கைது செய்தனர்.
News April 30, 2025
தூத்துக்குடி: லாரியில் மோதி கூலி தொழிலாளி உயிரிழப்பு

திருச்செந்தூர் மயிலப்புரம் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி மணிகண்டன் தற்போது உடன்குடி கொட்டாங்காடு பகுதியில் குடியிருந்து வருகிறார். நேற்று நேற்று (ஏப்.29) திருச்செந்தூர் சென்று விட்டு பைக்கில் ஊருக்கு திரும்பி உள்ளார். தோப்பூர் விலக்கு அருகே சென்ற போது நிலை தடுமாறி முன்னாள் சென்ற லாரியில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 30, 2025
ஊர்க்காவல் படை தளபதிக்கு எஸ்பி பாராட்டு

டெல்லி ஊர்க்காவல் படை உள்துறை அமைச்சகம் சிறப்பாக பணியாற்றிய ஊர்க்காவல் படையினருக்கு விருதுகள் வழங்குகிறது. அந்த வகையில் தூத்துக்குடி ஊர்காவல் படையில் 20 ஆண்டுக்காலம் சிறப்பாக பணியாற்றிய ஊர்க்காவல் படை தளபதி உலகம்மாளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது. இதனையடுத்து, அவரை நேற்று கோரம்பள்ளத்தில் உள்ள எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.