News March 29, 2024

கனிமொழி எம்பி பிரச்சார நிகழ்ச்சி விபரம் அறிவிப்பு

image

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராபர்ட் புரூசை ஆதரித்து கனிமொழி எம்பி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். வருகிற ஒன்றாம் தேதி மாலை 4 மணிக்கு வள்ளியூர் காமராஜர் சிலை அருகே பேசுகிறார். இரண்டாம் தேதி மாலை 4 மணிக்கு திருநெல்வேலி டவுன் வாகையடி முனை அருகே பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என தேர்தல் பணி குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Similar News

News December 27, 2025

நெல்லை: ரூ.3 லட்சத்தில் RBI வேலை

image

நெல்லை மக்களே; இந்திய ரிசர்வ் வங்கி கிரேடு ‘சி’ ஒப்பந்த அடிப்படையில் 77 காலியிடங்களுக்கு (ஐடி, வளாகம், மேற்பார்வை துறைகள்) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிஇ/பிடெக், எம்பிஏ, சிஏ உள்ளிட்ட தகுதி மற்றும் அனுபவம் அவசியம். 21 – 45 வயதிற்குட்பட்டவர்களுக்கு சம்பளம் ரூ.3.10 – 6 லட்சம் வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் 06.01.2026 வரை. விண்ணப்பிக்க<> opportunities.rbi.org.in.<<>> *ஷேர் பண்ணுங்க!

News December 27, 2025

நெல்லை: அரிவாளால் காதை வெட்டிய போலீஸ்

image

திருநெல்வேலி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் கான்ஸ்டபிள் டைசன் துரை(38) கிறிஸ்துமஸ் மதுவிருந்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சகலையான மெர்லின்(32) மீது அரிவாளால் தாக்குதல் நடத்தியுள்ளார். மெர்லினின் நண்பர்களிடம் சாதி குறித்து கேள்வி எழுந்ததில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மெர்லினுக்கு காதுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டைசன் துரை தலைமறைவாக உள்ளார்.

News December 27, 2025

நெல்லை: மதுபோதையால் நடந்த இரட்டை கொலை

image

திருநெல்வேலி, தச்சநல்லூர் கரையிருப்பில், ஆயுள் தண்டனை அனுபவித்து சமீபத்தில் விடுதலையான மூக்கன்(52), தங்க கணபதி (50) மது அருந்தும்போது(டிச.20) இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் மூக்கன், தங்க கணபதியை அரிவாளால் வெட்டினார். இதற்கு பதிலடியாக அவரது சகோதரர் முத்துகுமரன் மூக்கனை தாக்கினார். GH-ல் அனுமதிக்கப்பட்ட மூக்கன்(டிச.21), தங்க கணபதி(டிச.26) உயிரிழந்தனர். போதை தகராறு இரட்டை கொலையாக முடிந்தது.

error: Content is protected !!