News March 1, 2025
கனிமொழி எம்பி சுற்றுப்பயணம்

தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி நாளை (2) பகல் 12 மணிக்கு தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகளை பார்வையிடுகிறார். அதன்பின் வட வல்லநாட்டில் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார். அதனை எடுத்து உப்பாற்று ஓடையில் வெள்ளத் தடுப்பு பணிகளை ஆய்வு செய்யும் அவர் தூத்துக்குடியில் கட்டப்பட்டு வரும் இஎஸ்ஐ மருத்துவ மனை கட்டிடப் பணிகளையும் ஆய்வு செய்ய உள்ளார்.
Similar News
News March 2, 2025
இன்றைய தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலிஸ் இவங்க தான்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (மார்ச்.01) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணிகளில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 0461-2340393 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 9514144100 எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 1, 2025
தூத்துக்குடி மக்ரூன் பற்றிய சுவாரஸ்ய தகவல்

தமிழ்நாட்டில் முதன்முதலாக தூத்துக்குடியில் தான் மக்ரூன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை 100 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தியவர் சின்ன நட்டாத்தியை சேர்ந்த அருணாசலம் பிள்ளை. இவர் ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்தபோது போர்த்துகீசியரிடம் கற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. மக்ரூன் என்பது போர்த்துகீசிய சொல், தூத்துக்குடியில் அறிமுகமானதால் தூத்துக்குடி மக்ரூன் என அழைக்கப்படுகிறது.*நண்பர்களுக்கு பகிரவும்*
News March 1, 2025
சிறு வயது போட்டைவை பகிர்ந்து வாழ்த்து கூறிய கனிமொழி!

தென்னகத்தின் உரிமைக்குரலாய், தமிழ்நாட்டின் சுயமரியாதைச் சுடராய், தமிழ் நிலத்தின் தகத்தகாய சூரியனாய், தமிழ் மக்களின் தன்னிகரற்ற தலைவராய் விளங்கி வரும் அண்ணனின் 72வது பிறந்தநாளில் எனது அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தலைமையில் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கச் சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுக்க உறுதியேற்போம் என கனிமொழி MP ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.