News December 31, 2024

கனிமொழி எம்பிக்கு மெழுகுவர்த்தி அனுப்பும் போராட்டம்

image

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் தெரிவித்து கவன ஈர்ப்பு போராட்டமாக மெழுகுவர்த்தியை திமுகவைச் சேர்ந்த கனிமொழி எம்பிக்கு அனுப்ப திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜனதா மகளிரணியினர் முடிவு செய்தனர். அதன்படி நேற்று திருப்பூர் தலைமை தபால் நிலையத்தில் தபால் அனுப்ப சென்ற மகளிர் அணி நிர்வாகிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தபால் நிலையம் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Similar News

News September 17, 2025

திருப்பூர் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.

News September 17, 2025

திருப்பூர்: டிகிரி போதும் ரூ.47000 சம்பளத்தில் அரசு வேலை!

image

திருப்பூர் மக்களே, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC), துறையில் காலியாக Accounts Officer உள்ளிட்ட 213 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.47,600 வழங்கப்படுகிறது. இப்பணிக்கு Recruitment Test, Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் ஆக்.2 தேதிக்குள் இந்த லிங்கை<> க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

News September 17, 2025

திருப்பூர் அருகே சோக சம்பவம்

image

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு பாளையக்காடு அடுத்த சேர்மன் கந்தசாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரமிளா. இவரது இளைய மகன் படிப்பிற்காக வெளிநாடு செல்ல முடியாத காரணத்தால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.‌ இதனால் மன அழுத்தத்தில் இருந்த பிரமிளா நேற்று முன்தினம் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு உயிரிழந்தார்.

error: Content is protected !!