News February 18, 2025

கனிமவள காவலரை என ஆட்சியருக்கு ஆதரவாக போஸ்டர்

image

விருதுநகர் மாவட்டம் தோணுகால் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தண்டியனேந்தல் பேருந்து நிறுத்தம் பின்புறம் சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் அனுமதி வழங்கப்பட்ட கிரானைட் குவாரிக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கனிம வள காவலரை மாவட்ட ஆட்சியருக்கு ஆதரவாக வினோத போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. சாத்தூர் அருகே கனிமவளக் கொள்ளை தடுக்க தவறிய ஏழு பேரை மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News October 29, 2025

விருதுநகரில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

image

இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா 30.10.2025 அன்று  நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்ட வழித்தடங்களில் அமைந்துள்ள மதுக்கூடங்கள், எப்.எல்-2, மற்றும் எப்.எல்-3 ஆகிய உரிமஸ்தலங்களில் மதுபான விற்பனை ஏதும் செய்யக்கூடாது. அன்று ஒரு நாள் மட்டும்  தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா உத்தரவிட்டுள்ளார்.

News October 29, 2025

விருதுநகரில் 2150 போலீசார் பாதுகாப்பு பணி

image

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் 2150 போலீசார் வாகன சோதனை பாதுகாப்பு மற்றும் ஆய்வுப் பணியில் ஈடுபட உள்ளனர். குறிப்பாக விருதுநகர், அல்லம்பட்டி, பந்தல்குடி ராமலிங்காமில், சாத்தூர் பகுதியில் தோட்டிலோகன்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அழகாபுரி, திருச்சுழி பகுதியில் க.விலக்கு உள்ளிட்ட இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட உள்ளனர்.

News October 29, 2025

“அறிவும் வளமும்” என்ற தலைப்பில் வடிவமைக்கப்பட்ட இலச்சி

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (29.10.2025) 4வது விருதுநகர் புத்தகத் திருவிழா 2025 நடைபெறுவதை முன்னிட்டு, “அறிவும் வளமும்” என்ற தலைப்பில் வடிவமைக்கப்பட்ட இலச்சினை (LOGO) மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா வெளியிட்டார். நவம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 11 நாட்கள் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.

error: Content is protected !!